Song 633
முலையை மறைத்துத் திறப்ப ராடையை
- Sthalam
- கழுகுமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தத்தத் தனத்த தானனதனதன தத்தத் தனத்த தானனதனதன தத்தத் தனத்த தானனதனதான
Lyrics
முலையை மறைத்துத் திறப்ப ராடையைநெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமலரணைமீதே
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரிதவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைகளுறவாமோ
தலைமுடி பத்துத் தெறித்து ராவணனுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொருதநுவை வளைத்துத் தொடுத்த வாளியன்மருகோனே
கலைமதி யப்புத் தரித்த வேணியருதவிய வெற்றித் திருக்கை வேலவகழுகு மலைக்குட் சிறக்க மேவியபெருமாளே.
