Song 632
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
- Sthalam
- கழுகுமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதனா தனத்த தானனதனன தனதனா தனத்த தானனதனன தனதனா தனத்த தானனதனதான
Lyrics
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணிமுலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்கொடிது கொடிததால் வருத்த மாயுறுதுயராலே
மதலை மறுகிவா லிபத்தி லேவெகுபதகர் கொடியவா ளிடத்தி லேமிகவறுமை புகல்வதே யெனக்கு மோஇனிமுடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்மடிய அயிலையே விடுத்த வாகருமுகிலை யனையதா நிறத்த மால்திருமருகோனே
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளியிசையை முரலமா வறத்தில் மீறியகழுகு மலைமகா நகர்க்குள் மேவியபெருமாளே.
