Song 628
தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே
- Sthalam
- குன்றக்குடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தனத்தந்தனதான
Lyrics
தவள மதிய மெறிக்குந்தணலாலே
சரச மதனன் விடுக்குங்கணையாலே
கவன மிகவு முரைக்குங்குயிலாலே
கருதி மிகவு மயக்கம்படவோநான்
பவள நிகரு மிதழ்ப்பைங்குறமானின்
பரிய வரையை நிகர்க்குந்தனமேவுந்
திவளு மணிகள் கிடக்குந்திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண்பெருமாளே.
