Song 627
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
- Sthalam
- குன்றக்குடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்தத் தனதன தந்தத்தனதன தந்தத்தனதான
Lyrics
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்பருவம தன்கைச்சிலையாலே
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்பெருவழி செனறக்குணமேவிச்
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்செயலும ழிந்தற்பமதான
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்சிலசில பங்கப்படலாமோ
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்கிலுமெதிர் சண்டைக்கெழுசூரன்
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்கிழிபட துன்றிப்பொருதோனே
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்பனமநு வுஞ்சொற்குருநாதா
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்குடிவளர் கந்தப்பெருமாளே.
