Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 606

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்யதத்த தன்ன தய்யதனதான

Lyrics

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்கட்கு மன்னு மில்லமிதுபேணி

கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளுகக்க எண்ணி முல்லைநகைமாதர்

இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கியிட்டு பொன்னை யில்லையெனஏகி

எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளியெற்று மிங்ங னைவதியல்போதான்

முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ளமுட்ட நன்மை விள்ளவருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லிமுத்தி விண்ண வல்லிமணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லிபட்ட துன்னு கொல்லிமலைநாடா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ளபச்சை மஞ்சை வல்லபெருமாளே.

All songs →