Song 605
கொடிய மறலியு மவனது கடகமு
- Sthalam
- திருச்செங்கோடு
- Raagam
- சந்தர கெளன்ஸ்
- Thalam
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
கொடிய மறலியு மவனது கடகமுமடிய வொருதின மிருபதம் வழிபடுகுதலை யடியவ னினதருள் கொடுபொருமமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமுமறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்கொடியு மகிலமும் வெளிபட இருதிசையிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுதுதிகிரி திகிரியும் வருகென வருதகுபவுரி வருமொரு மரகத துரகதமிசையேறிப்
பழய அடியவ ருடனிமை யவர்கணமிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடுபரவ வருமதி லருணையி லொருவிசைவரவேணும்
சடில தரவிட தரபணி தரதரபரசு தரசசி தரசுசி தரவிததமரு கமிருக தரவனி தரசிரதரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுலதடினி தரசிவ சுதகுண தரபணிசயில விதரண தருபுர சசிதருமயில்வாழ்வே
நெடிய வுடலரு இருளெழ நிலவெழஎயிறு சுழல்விழி தழலெழ எழுகிரிநெரிய அதிர்குரல் புகையெழ இடியெழநெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தளநிகில சகலமு மடியவொர் படைதொடுநிருப குருபர சுரபதி பரவியபெருமாளே.
