Song 583
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
- Sthalam
- விராலிமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனதனன தான தனதனனதான தனதனனதந்ததான
Lyrics
மோதி யிறுகிவட மேரு வெனவளருமோக முலையசையவந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகிமூட மெனஅறிவுகொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடுகாலி லிறுகஎனைவந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமைகாண வருவதினியெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலையாடு மரனுமிவரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமகமாயி கவுரியுமைதந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசைதோய வளர்கிரியினுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்தோகை மயிலுலவுதம்பிரானே.
