Song 572
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
- Sthalam
- விராலிமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனன தனதனதனதன தனதன தனன தனதனதத்தன தந்ததன தத்தன தந்ததன--------- 3 முறை ---------தனதான
Lyrics
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மணமுதவிய புகையினி லளவி வகைவகைகொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளெனநிறமது கருகிநெ டுகிநெ றிவுபடநெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையெனவிலகிய திலதநு தலும திமுகமும்உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படருமுனைவாளும்
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொருகடுவது மெனநெடி தடுவ கொடியனஇக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்விளைநற வினியமொ ழியுமி னையதெனஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலைநெடியக வுடியிசை முரலு சுரிமுகநத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனையஎழில்தோளும்
விதரண மனவித னமதை யருள்வனசததள மறைமுகி ழதனை நிகர்வனபுத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமளதமனிய ப்ரபைமிகு தருண புளகிதசித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணிமுகபட விகடின தனமு முயர்வடபத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுளமதியாத
விபரித முடையிடை யிளைஞர் களைபடஅபகட மதுபுரி யரவ சுடிகையரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுரஅணிநட னபதமு முடைய வடிவினர்பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகியபிரமையு மறவுன தருள்கை வரவுயர்பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவதொருநாளே
தததத தததத ததத தததததிதிதிதி திதிதிதி திதிதி திதிதிதிதத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகுடிகுடிகு டகுடகு டிகுகு டகுடகுதத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதகதிமிதிமி செககண திமித திகதிகதத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதியெனவேதான்
தபலை டமுழவு திமிலை படகமதபுதச லிகைதவில் முரசு கரடிகைமத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்திகுதிகு திகுவென அலகை குறளிகள்விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிடஎதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிடவப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழவெகுகோடி
மதகஜ துரகர தமுமு டையபுவியதலமு தல்முடிய இடிய நெடியதொர்மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடிபரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலறமயலொடு மலமற அரிய பெரியதிருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்குகவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலைபலதெரி விதரண முருக சரவணஉற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவகுருபர வெளிமுக டுருவ வுயர்தருசக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசைமருவியெ யருமைய இளமை யுருவொடுசொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவருபெருமாளே.
