Song 569
பாதாள மாதி லோக நிகிலமு
- Sthalam
- விராலிமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானான தான தான தனதனதானான தான தான தனதனதானான தான தான தனதனதனதான
Lyrics
பாதாள மாதி லோக நிகிலமுமாதார மான மேரு வெனவளர்பாடீர பார மான முலையினைவிலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொலாலேய நேக மோக மிடுபவர்பாதாதி கேச மாக வகைவகைகவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரணநாதானி லாத பாவி யநிஜவன்வீணாள்ப டாத போத தவமிலிபசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிருசீர்பாத தூளி யாகி நரகிடைவீழாம லேசு வாமி திருவருள்புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிடவேதாமு ராரி யோட அடுபடைசோராவ லாரி சேனை பொடிபடமறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவெனமாமாய வீர கோர முடனிகல்சூர்மாள வேலை யேவும் வயலியிலிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசைசாதாரி தேசி நாம க்ரியைமுதல்கோலால நாத கீத மதுகரமடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவியகானாறு பாயு மேரி வயல்பயில்கோனாடு சூழ்வி ராலி மலையுறைபெருமாளே.
