Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 565

கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத்தனதான

Lyrics

கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்கமலத் தியல்மைக்கணினாலே

கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்கதிர்விட் டெழுமைக்குழலாலே

நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்குளநற் பெருசெப்பிணையாலே

நலமற் றறிவற் றுணர்வற் றனனற்கதியெப் படிபெற்றிடுவேனோ

புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்கறமுற் சரமுய்த்தமிழ்வோடும்

பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்டொழியப் புகழ்பெற்றிடுவோனே

செயசித் திரமுத் தமிழுற் பவநற்செபமுற் பொருளுற்றருள்வாழ்வே

சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்றிகழ்மெய்க் குமரப்பெருமாளே.

All songs →