Song 564
நெறித்துப் பொருப்புக் கொத்த
- Sthalam
- திருக்கற்குடி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தத் தனத்தத் தத்ததனத்தத் தனத்தத் தத்ததனத்தத் தனத்தத் தத்ததனதான
Lyrics
நெறித்துப் பொருப்புக் கொத்தமுலைக்குத் தனத்தைக் கொட்டிநிறைத்துச் சுகித்துச் சிக்கிவெகுநாளாய்
நினைத்துக் கொடத்துக் கத்தையவத்தைக் கடுக்கைப் பெற்றுநிசத்திற் சுழுத்திப் பட்டஅடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டியுகைத்துத் துடிக்கப் பற்றியிழுத்துத் துவைத்துச் சுற்றியமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டுவிரித்துத் தொகைக்குட் பட்டஇலக்கப் படிக்குத் தக்கபடியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டுமலத்திற் புகட்டித் திட்டிமுழுக்கக் கலக்கப் பட்டுஅலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்றதமிழ்க்குச் சரித்துச் சித்திமுகத்திற் களிப்புப் பெற்றுமயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தியயிற்குத் தரத்தைக் கைக்குள்உதிக்கப் பணித்துப் பக்கல்வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்ககருத்தைக் கொடுப்பைச் சித்தியுடைக்கற் குடிக்குட் பத்தர்பெருமாளே.
