Song 512
மருவு கடல்முகி லனைய குழல்மதி
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனன தனதனதனன தனதன தனன தனதனதத்தத் தத்தன தத்தத் தத்தனதத்தத் தத்தன தத்தத் தத்தன--------- 3 முறை ---------தனதான
Lyrics
மருவு கடல்முகி லனைய குழல்மதிவதன நுதல்சிலை பிறைய தெணும்விழிமச்சப் பொற்கணை முக்குப் பொற்குமிழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரைதரள மெனுநகை மிடறு கமுகெனவைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொடொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநகமெனவு மிகலிய குவடு மிணையெனவட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ்முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொடசைய பழுமர இலைவ யிறுமயிரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலெனஅரிய கடிதட மமிர்த கழைரசமட்டுப் பொற்கம லத்திற் சக்கிரிதுத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்கணையு முழவென கமட மெழுதியவட்டப் புத்தக மொத்துப் பொற்சரணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள்மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடுதெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிடமலர்க ளணைகுழ லிடைகொள் துகில்படதித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடுகட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமெனபலவில் சுளையென வுருக வுயர்மயல்சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கெனநரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசலமொழுக பலவுரை குழற தடிகொடுதெத்திப் பித்தமு முற்றித் தற்செயலற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினிலுவரி நிறமுடை நமனு முயிர்கொளசெப்பற் றுப்பிண மொப்பித் துப்பெயரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசைஅறைய அணைபவ ரெடென சுடலையில்சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படிநித்தத் துக்கமெ டுத்திட் டுச்சடமுழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்குதிரை கொளவரு நிறைத வசிதலைகொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புதமெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடைஅருண வுழைமழு மருவு திருபுயர்கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழவிட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடுவளையு மெழுகட லதிர முழவொடுகொட்டத் துட்டரை வெட்டித் தட்கடலொப்பத் திக்கும டுத்துத் தத்திடஅமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபடமலைகள் பொடிபட வுடுக ளுதிரிடகொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரிஎட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபரகுமர குருபர எனவோ தமரர்கள்கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சரணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபலகருட னடமிட குருதி பருகிடகொற்றப் பத்திர மிட்டுப் பொற்ககனத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளுமயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொருபொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடுசிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிரவர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுலகடைய நெடியவர் திருவு மழகியர்தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சினமுற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகரமிருப துடைகிரி சிரமொர் பதும்விழதிக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடுபச்சைப் பொற்புய லுக்குச் சித்திரமருகோனே
திலத மதிமுக அழகி மரகதவடிவி பரிபுர நடனி மலர்பதசித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன்முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவிதசொருபி முதுவிய கிழவி யியல்கொடுசெட்டிக் குச்சுக முற்றத் தத்துவசித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியினரிய மகனென புகழ்பு லிநகரில்செப்புப் பொற்றன முற்றப் பொற்குறதத்தைக் குப்புள கித்திட் டொப்பியபெருமாளே.
