Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 511

மதிய மண்குண மஞ்சு நால்முக

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதனன தந்தன தந்த தானனதந்ததான

Lyrics

மதிய மண்குண மஞ்சு நால்முகநகர முன்கலை கங்கை நால்குணமகர முன்சிக ரங்கி மூணிடைதங்குகோண

மதன முன்தரி சண்ட மாருதமிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெருவகர மிஞ்சிய கன்ப டாகமொரென்றுசேறுங்

கதிர டங்கிய அண்ட கோளகையகர நின்றிடும் ரண்டு கால்மிசைககன மின்சுழி ரண்டு கால்பரிகந்துபாயுங்

கருணை யிந்திரி யங்கள் சோதியஅருண சந்திர மண்ட லீகரர்கதிகொள் யந்திர விந்து நாதமொடென்றுசேர்வேன்

அதிர பம்பைகள் டங்கு டாடிகமுதிர அண்டமொ டைந்து பேரிகைடகுட டண்டட தொந்த தோதகஎன்றுதாளம்

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடிதவி தம்பெறு சிந்து பாடிடஅமரர் துந்துமி சங்கு தாரைகள்பொங்கவூடு

உதிர மண்டல மெங்கு மாயொளியெழகு மண்டியெ ழுந்து சூரரைஉயர்ந ரம்பொடெ லும்பு மாமுடிசிந்திவீழ

உறுசி னங்கொடெ திர்ந்த சேவகமழைபு குந்துய ரண்டம் வாழ்வுறவுரகு னும்புலி கண்ட வூர்மகிழ்தம்பிரானே.

All songs →