Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 495

இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனா தத்ததன தனதனா தத்ததனதனதனா தத்ததன தானனந் தனன----- 3 முறை -----தந்ததான

Lyrics

இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகையிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்களெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிகளிகலியா டப்படிக மோடடும் பொனுருதிங்கள்மேவும்

இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழிலிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளியிணைசொல்க்஡ண வத்தரள வினவொள்தா லப்பனையினியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடியிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபடரிகலியா ரத்தொடையு மாருமின் பரசதங்கமார்பின்

வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழியமடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரைமருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடைரம்பைமாதர்

மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகுமதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசைவதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளிவசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையைதந்துஆள்வாய்

முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளைமுகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறைமுதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொடிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசையெங்குமோட

முடுகிவேல் விட்டுவட குவடு வாய் விட்டமரர்முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவரமுடிபதா கைப்பொலிய வேந டங்குலவுகந்தவேளே

அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகிழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்களளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரியஅமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்களடையுமே ரக்கனக நாடெனும் புலியுர்சந்தவேலா

அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவியளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடைஅரசிவே தச்சொருபி கமலபா தக்கரவியரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்அருண்ரு பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொடணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர்தம்பிரானே.

All songs →