Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 494

தறுகணன் மறலி முறுகிய கயிறு

Thalam
அங்கதாளம் (14)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2தனதன தனன தனதன தனனதனதன தனனாத்தனதான

Lyrics

தறுகணன் மறலி முறுகிய கயிறுதலைகொடு விசிறீக்கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதிதலைகொடு பலசாத்திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவியலைபடு தநல்முச்சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளைஅலம்வர அடியேற்கருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருகநகமுத வியபார்ப்பதிவாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்நடமிடு புலியூர்க்குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவுகடலிடை பொடியாப்பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவுகனவிலு மறியாப்பெருமாளே.

All songs →