Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 478

முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தய்யதன தானனத் தானனந் தானதனதய்யதன தானனத் தானனந் தானதனதய்யதன தானனத் தானனந் தானதனதனதான

Lyrics

முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகைவள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழைமுல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழலலைபோதம்

மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுகமுன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலைமலையானை

வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயிறுள் ளதுகில் நூலிடைக் காமபண் டார அல் குல்வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரிபுரவோசை

மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடுவல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மயலுறவாமோ

அல்லல்வினை போகசத் தாதிவிண் டோ டநயவுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகிழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமரமுருகோனே

அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளிமணவாளா

செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோ டதிரவல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதிசெல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுகவடிவேலா

தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசிவல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவுபெருமாளே.

All songs →