Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 477

இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதாத்த தய்ய தனதாத்த தய்யதனதாத்த தய்யதனதான

Lyrics

இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லினுதல்காட்டி வெல்லுமிருபாண

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லைநகைகாட்டு வல்லியிடைமாதர்

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்லஇடுகாட்டி னெல்லைநடவாத

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்லவினை வாட்டி யல்லல்செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்மொழிகாட்டு தில்லையிளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்லகுறவாட்டி புல்லுமணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வஅடல்காட்டு வல்லசுரர்கோபா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்லஅடியார்க்கு நல்லபெருமாளே.

All songs →