Song 43
களபம் ஒழுகிய புளகித முலையினர்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
களபம் ஒழுகிய புளகித முலையினர்கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்கழுவு சரிபுழு கொழுகிய குழலினர்எவரோடுங்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடுதளர விடுபவர் தெருவினில் எவரையும்நகையாடிப்
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்நடையில் உடையினில் அழகொடு திரிபவர்பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடுகுழைவோடே
பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்பெருமை யுடையவர் உறவினை விடஅருள்புரிவாயே
அளையில் உறைபுலி பெறுமக வயிறருபசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்வசவ னொடுபுலி முலையுண மலையுடன்உருகாநீள்
அடவி தனிலுள உலவைகள் தளிர்விடமருள மதமொடு களிறுகள் பிடியுடன்அகல வெளியுயர் பறவைகள் நிலம்வரவிரல்சேரேழ்
தொளைகள் விடுகழை விரல்முறை தடவியஇசைகள் பலபல தொனிதரு கருமுகில்சுருதியுடையவன் நெடியவன் மனமகிழ்மருகோனே
துணைவ குணதர சரவண பவநமமுருக குருபர வளரறு முககுகதுறையில் அலையெறி திருநகர் உறைதருபெருமாளே.
