Song 42
கருப்பந்தங் கிரத்தம்பொங்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனதானா
Lyrics
கருப்பந்தங் கிரத்தம்பொங்கரைப்புண்கொண் டுருக்கும்பெண்களைக்கண்டங் கவர்ப்பின்சென்றவரோடே
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்துவக்குண்டும் பிணக்குண்டுங்கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந்தடுமாறிச்
செருத்தண்டந் தரித்தண்டம்புகத்தண்டந் தகற்கென்றுந்திகைத்தந்திண் செகத்தஞ்சுங்கொடுமாயும்
தியக்கங்கண் டுயக்கொண்டென்பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்சிதைத்துன்றன் பதத்தின்பந்தருவாயே
அருக்கன்சஞ் சரிக்குந்தெண்டிரைக்கண்சென் றரக்கன்பண்பனைத்தும்பொன் றிடக்கன்றுங்கதிர்வேலா
அணிச்சங்கங் கொழிக்குந்தண்டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்தளிக்குஞ்செந் திலிற்றங்குங்குமரேசா
புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்புதுக்குங்கங் கையட்குந்தஞ்சுதனானாய்
புனைக்குன்றந் திளைக்குஞ்செந்தினைப்பைம்பொன் குறக்கொம்பின்புறத்தண்கொங் கையிற்றுஞ்சும்பெருமாளே.
