Song 424
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தத் தந்தத் தனதன தானனதந்தத் தந்தத் தனதன தானனதந்தத் தந்தத் தனதன தானனதனதான
Lyrics
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலைகும்பத் தந்திக் குவடென வாலியதெந்தப் பந்தித் தரளம தாமெனவிடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுனதங்கத் தம்பொற் பெதுவென வோதுவதிண்டுப் புந்தித் திடுகனி தானுமுனிதழாமோ
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடைகஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிளவஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயெனமுறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடுகொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழுமந்தப் புந்திக் கசடனெ நாளுனதடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடுதிங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனையுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வரநந்திக் கம்பத் தெழுநர கேசரிநஞ்சக் குண்டைக் கொருவழி யேதெனமிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகிவிந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர்புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதிதுங்கத் துங்கக் கிரியரு ணாபுரிவெங்கட் சிங்கத் தடிமயி லேறியபெருமாளே.
