Song 416
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானான தானன தனதன தானான தானனதனதன தானான தானனதனதான
Lyrics
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலிகுலவனு மாய்நாடு காடொடுதடுமாறிக்
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விடவிறகுட னேதூளி யாவதுமறியாதாய்ப்
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதரபரிவிலி வானாலை நாடொறுமடைமாறிப்
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதகபதியழி யாவீடு போயினியடைவேனோ
எழுகடல் தநமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமுமிரவியும் வாய்பாறி யோடிடமுதுசேடன்
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரியிருபிள வாய்வீழ மாதிரமலைசாய
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்அவுணர்த மாசேனை தூளெழவிளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்அருணையில் வாழ்வாக மேவியபெருமாளே.
