Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 415

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனதனன தானத் தாத்தனதனதனன தனதனன தானத் தாத்தனதனதனன தனதனன தானத் தாத்தனதனதான

Lyrics

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெகுலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெகுமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெகுழையாத

குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெகுலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெகுடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெகொடியேன்யான்

பொருளிளமை கலைமனமு மேகப் போக்கியபுலையனிவ னெனவுலக மேசப் போக்கெனபொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள்பெருகாதே

புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெபொதுவகையி லருணைநிலை நீள்கர்த்தாவெனபுகழடிமை தனையுனது பார்வைக் காத்திடநினையாதோ

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமுமணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெஅறிவரிய வொருபொருளை போதத் தேற்றியஅறிவோனே

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்தருமமது சரவணையில் வாவித் தேக்கியெஅறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றியஇளையோனே

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்படதுயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரமசுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிடமுனிவோனே

துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்துணைமலரி னணுகிதினை காவற் காத்தனைசுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணைபெருமாளே.

All songs →