Song 405
உலையிலன லொத்தா வுடலினனல் பற்றி
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தத்த தனதனன தத்ததனதனன தத்ததனதான
Lyrics
உலையிலன லொத்தா வுடலினனல் பற்றியுடுபதியை முட்டியமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்றுவுனதடியை நத்திநினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டுதிகழ்முகவர் முத்துநகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்திருடனென வெட்கியலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்டகனகமயில் விட்டகதிர்வேலா
கருதலரின் முட்டி கருகிவரு துட்டகதவமண ருற்றகுலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றிஅருணைவளர் வெற்பிலுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டுஅரசுநிலை யிட்டபெருமாளே.
