Song 373
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்முலைக ளளவிடு முகபட பகடிகள்முதலு முயிர்களு மளவிடு களவியர்முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்முனைகொ ளயிலென விழியெறி கடைசியரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்மனது திரவிய மளவள வளவியர்வசன மொருநொடி நிலைமையில் கபடியர்வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்அருணை நகர்மிசை கருணையொ டருளியமவுன வசனமு மிருபெரு சரணமுமறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபதுகனக மவுலிகொள் புரிசைசெய் பழையதுகடிய வியனகர் புகவரு கனபதிகனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழஅணையி லலையெறி யெதிரமர் பொருதிடுகளரி தனிலொரு கணைவிடு மடலரிமருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலியகல நிலைபெறு சயிலமு மிடிசெய்துதரும னவர்பதி குடிவிடு பதனிசைமயில்வீரா
தருண மணியவை பலபல செருகியதலையள் துகிலிடை யழகிய குறமகள்தனது தனமது பரிவொடு தழுவியபெருமாளே.
