Song 372
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலெனமுதிய மதியது முகமென நுதலிணைமுரணர் வரிசிலை முடுகிடு கணைவிழியென்முவா
முளரி தனின்முகு ளிதமலர் முலையெனமுறுவல் தனையிரு குழைதனை மொழிதனைமொழிய வரியதொர் தெரிவையர் வினையெனமொழிகூறிப்
பகலு மிரவினு மிகமன மருள்கொடுபதியி லவர்வடி வுளதழ கெனவொருபழுது மறஅவர் பரிவுற இதமதுபகராதே
பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபடவிகட முடனடை பயில்மயில் மிசைவருபவனி தனையநு தினநினை யென அருள்பகர்வாயே
புகல வரியது பொருளிது எனவொருபுதுமை யிடஅரி யதுமுத லெனுமொருபொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள்புடைசூழப்
புரமு மெரியெழ நகையது புரிபவர்புனலும் வளர்மதி புனைசடை யினரவர்புடவி வழிபட புதை பொருள் விரகொடுபுகல்வோனே
அகில கலைகளு மறநெறி முறைமையுமகில மொழிதரு புலவரு முலகினிலறிஞர் தவமுயல் பவர்களு மியலிசையதனாலே
அறுவர் முலையுணு மறுமுக னிவனெனஅரிய நடமிடு மடியவ ரடிதொழஅருணை நகர்தனி லழகுடன் மருவியபெருமாளே.
