Song 370
துகிலு ம்ருகமத பரிமள அளகமு
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
துகிலு ம்ருகமத பரிமள அளகமுநெகிழ இருதன கிரியசை தரஇடைதுவள மனிதரு மமரரு முநிவருமுடனோடித்
தொடர வனமணி மகரமி லகுகுழையடரு வனவிட மிளிர்வன ரதிபதிசுருதி மொழிவன கயல்விழி புரள்தரநடுவாக
வகிரு மதிபுரை தநுநுதல் பனிவரவனச பதயுக பரிபுர மொலிபடமறுகு தொறுமுல வியினிய கலவியைவிலைகூறும்
வரைவி லரிவையர் தருசுக சலதியிலலையு மெனதுயி ரநுதின நெறிதருமவுன சிவசுக சலதியில் முழுகுவதொருநாளே
முகிலு மதியமும் ரவியெழு புரவியுநெடிய குலைமிட றிடறமு துககனமுகடு கிழிபட வளர்வன கமுகினமிசைவாளை
முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்தடமு முளரிய அகழியு மதிள்களுமுழுது முடையதொ ரருணையி லுறைதருமிளையோனே
அகிலு மருதமு முகுளித வகுளமுமமுத கதலியும் அருணமும் வருடையுமபரி மிதமத கரிகளு மரிகளுமுடனேகொண்
டருவி யிழிதரு மருவரை தனிலொருசவர வனிதையை முநிதரு புனிதையைஅவச முடன்மல ரடிதொழு துருகியபெருமாளே.
