Song 369
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
- Sthalam
- திருவருணை
- Raagam
- ஹம்ஸா நந்தி
- Thalam
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்பிசித அசனம றவரிவர் முதலியகலக விபரித வெகுபர சமயிகள்பலர்கூடிக்
கலக லெனநெறி கெடமுறை முறைமுறைகதறி வதறிய குதறிய கலைகொடுகருத அரியதை விழிபுனல் வரமொழிகுழறாவன்
புருகி யுனதருள் பரவுகை வரில்விரகொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெயலுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையளறதுபோக
உதறி லெனதெனு மலமறி லறிவினிலெளிது பெறலென மறைபறை யறைவதொருதய மரணமில் பொருளினை யருளுவதொருநாளே
தருண சததள பரிமள பரிபுரசரணி தமனிய தநுதரி திரிபுரதகனி கவுரிப வதிபக வதிபயிரவிசூலி
சடில தரியநு பவையுமை திரிபுரைசகல புவனமு முதவிய பதிவ்ருதைசமய முதல்வித னயபகி ரதிசுதசதகோடி
அருண ரவியினு மழகிய ப்ரபைவிடுகருணை வருணித தனுபர குருபரஅருணை நகருறை சரவண குரவணிபுயவேளே
அடவி சரர்குல மரகத வனிதையுமமரர் குமரியு மனவர தமுமருகழகு பெறநிலை பெறவர மருளியபெருமாளே.
