Song 37
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- பிலஹரி
- Thalam
- ஆதி - 2 களை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தந்தத் தானா தந்தத்தானா தந்தத்தனதானா
Lyrics
ஓரா தொன்றைப் பாரா தந்தத்தோடே வந்திட்டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்டாமால் தந்திட்டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்கோயா நின்றுட்குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்கோடா தென்கைக்கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்றோளா குன்றைத்தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்சூர்மா அஞ்சப்பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்சேவா றெந்தைக்கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்சேயே செந்திற்பெருமாளே.
