Song 36
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- வலஜி / பந்துவராளி
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - 3/4 இடம்)தானன தானன தானன தானனதானன தானனதனதானா
Lyrics
ஏவினை நேர்விழி மாதரை மேவியஏதனை மூடனைநெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழுஏழையை மோழையைஅகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனைவாய்மையி லாதனையிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனிவாழ்வுற ஈவதுமொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வருநாரத னார்புகல்குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவகநாயக மாமயிலுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரைதேன்மொழி யாள்தருசிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்சீரலை வாய்வருபெருமாளே.
