Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 340

கலகலெ னப்பொற் சேந்த நூபுர

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தத்தத் தாந்த தானனதனதன தத்தத் தாந்த தானனதனதன தத்தத் தாந்த தானனதனதான

Lyrics

கலகலெ னப்பொற் சேந்த நூபுரபரிபுர மொத்தித் தாந்த னாமெனகரமல ரச்சிற் றாந்தொ மாடியபொறியார்பைங்

கடிதட முற்றுக் காந்த ளாமெனஇடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலைகனதன பொற்பிட் டோ ங்கு மார்பொடுவடமாடச்

சலசல சச்சச் சேங்கை பூண்வளைபரிமள பச்சைச் சேர்ந்து லாவியசலசமு கத்துச் சார்ந்த வாள்விழிசுழலாடத்

தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்சரசமு ரைத்துச் சேர்ந்த தூவையருறவாமோ

திலதமு கப்பொற் காந்தி மாதுமையெனையருள் வைத்திட் டாண்ட நாயகிசிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதிசிவகாமி

திரிபுவ னத்தைக் காண்ட நாடகிகுமரிசு கத்தைப் பூண்ட காரணிசிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமையருள்பாலா

அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிடநரிகழு குப்பிச் சீர்ந்து வாயிடஅசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கரமுடையோனே

அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்விபுதகு றத்திக் காண்ட வாதினமழகுசி றக்கக் காஞ்சி மேவியபெருமாளே.

All songs →