Song 338
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானாந்தன தனதன தானாந்தனதனதன தானாந்தனதனதான
Lyrics
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணைகலகமர் வாய்தோய்ந்தமளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படிகனவிய வாரேந்தினஇளநீர்தோய்ந்
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கியஇவளுடன் மால்கூர்ந்திடுமநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்இதவிய பாதாம்புயமருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரஅதுலன நீலாம்பரமறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்அறமுறு சீகாஞ்சியிலுறைவோனே
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெயவெடிபடு தேவேந்திரனகர்வாழ
விரிகடல் தநமுண்டிட நிசிசரர் வேர்மாண்டிடவினையற வேல்வாங்கியபெருமாளே.
