Song 337
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
- Sthalam
- காஞ்சீபுரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தனதன தத்தத் தனதனதத்தத் தனதனதனதான
Lyrics
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவியமச்சக் கொடிமதன்மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடைஅச்சப் படவெழுமதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வதுசொச்சத் தரமலஇனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகியசெச்சைத் தொடையதுதரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளியகச்சிப் பதிதனிலுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெடஉற்றுப் பொரவலகதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்மெச்சித் தழுவியதிருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபடவெட்டித் துணிசெய்தபெருமாளே.
