Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 33

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனன தனத்தத் தாத்தனதனதன தனன தனத்தத் தாத்தனதனதன தனன தனத்தத் தாத்தனதந்ததான

Lyrics

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவுமிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவுமிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவுமைந்தரோடே

இலைபிள வதனை நடித்துக் கேட்கவுமறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவுமிடையிடை சிறிது நகைத்துக் காட்டவுமெங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவுநிந்தையாலே

வனைமனை புகுதி லடித்துப் போக்கவுமொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்வசைவிட நினது பதத்தைப் போற்றுவதெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டியகழைமட வுருவு வெளுத்துத் தோற்றியகுளிறிசை யருவி கொழித்துத் தூற்றியமண்டுநநருர்

குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழுதிடர்மண லிறுகு துருத்திக் காப்பொதிகுளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனைவண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினைவிளைநடு விதணி லிருப்பைக் காட்டியமுகிழ்முலை யிளைய குறத்திக் காட்படுசெந்தில்வாழ்வே

முளையிள மதியை யெடுத்துச் சாத்தியசடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திரமுறையருள் முருக தவத்தைக் காப்பவர்தம்பிரானே.

All songs →