Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 32

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தனதனதன தனந்த தந்தனதனதான

Lyrics

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திடஇணைசிலைநெ ரிந்தெ ழுந்திடஅணைமீதே

இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திடஇதழமுத ருந்த சிங்கியின்மனமாய

முருகொடுக லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்முலைமுகடு கொண்டெ ழுந்தொறுமுருகார

முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடுமுகடியுந லம்பி றந்திடஅருள்வாயே

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையுமிதழியொட ணிந்த சங்கரர்களிகூரும்

இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளியெனதுயிரெ னுந்த்ரி யம்பகிபெருவாழ்வே

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைகளணிமணிச தங்கை கொஞ்சிடமயில்மேலே

அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்அலைபொருத செந்தில் தங்கியபெருமாளே.

All songs →