Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 316

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு - 1/2 இடம்)தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான

Lyrics

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்சுடர்வேலும்

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும்படிநாடும்

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன்பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்றருள்வாயே

குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ்சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங்கமுராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்ஜகதாதை

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்பெருமாளே.

All songs →