Song 307
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
- Sthalam
- ஆறு திருப்பதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதானன தனதன தனதானனதனதன தனதானனதனதான
Lyrics
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்அபகட மகபாவிகள்விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்அசடரொ டுறவாடிகள்அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்கருதிடு கொடியாருடனினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நி முடனைகழலிணை பெறவேயினியருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகியஅறுமுக வடிவே அருள்குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெறஅதிரிடும் வடிவேல்விடுமதிசூரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயெனதரணியி லடியார்கணநினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவியதடமயில் தனிலேறியபெருமாளே.
