Song 302
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
- Sthalam
- குன்றுதோறாடல்
- Raagam
- ஹம்ஸத்வனி
- Thalam
- கண்டத்ருவம் (17)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - /5/5 0 /5)தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்த தனதான
Lyrics
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்விட்டகணை பட்டவிசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்விரித்தொளிப ரப்புமதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசைபட்டதிகி ரிக்குமழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்பச்சைமயி லுற்றுவரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நினைக்குமன மொத்தகழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுறநித்தமிறு கத்தழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்எப்பொழுது நிற்குமுருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்இட்டசிறை விட்டபெருமாளே.
