Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 280

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத்தனதான

Lyrics

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்பரித்தவப் பதத்தினைப்பரிவோடே

படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்பசிக்குடற் கடத்தினைப்பயமேவும்

பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்பிணித்தமுக் குறத்தொடைப்புலனாலும்

பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்குறிக்கருத் தெனக்களித்தருள்வாயே

கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்கழித்தமெய்ப் பதத்தில்வைத்திடுவீரா

கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்கதித்தநற் றிருப்புயத்தணைவோனே

செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்சிரித்தெரித் தநித்தர்பொற்குமரேசா

சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்சிறப்புடைத் திருத்தணிப்பெருமாளே.

All songs →