Song 279
பகலி ராவினுங் கருவி யாலனம்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- தந்யாசி
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தனன தானனம் தனன தானனம்தனன தானனம்தனதான
Lyrics
பகலி ராவினுங் கருவி யாலனம்பருகி யாவிகொண்டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்பலபு ராணமுஞ்சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்பொருளி லேயமைந்தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்தறிவி லேனழிந்திடலாமோ
சகல லோகமும் புகல நாடொறுஞ்சறுகி லாதசெங்கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென்தணிகை மேவுசெங்கதிர்வேலா
சிகர பூதரந் தகர நான்முகன்சிறுகு வாசவன்சிறைமீளத்
திமிர சாகரங் கதற மாமரஞ்சிதற வேல்விடும்பெருமாளே.
