Song 275
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- சுப பந்துவராளி
- Thalam
- சதுஸ்ர ஏகம் (4 களை) (16)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனனதனதான
Lyrics
தொக்கறாக் குடில சுத்தமேற் றசுகதுக்கமாற் கடமுமலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலைதுப்பிலாப் பலசமயநூலைக்
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவலப்புலாற் றசைகுருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழலசட்டவாக் கழிவதொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்அர்ச்சியாத் தொழுமுநிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்வெற்பபார்ப் பதிநதிகுமாரா
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுதவத்தினோர்க் குதவுமிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொடெத்தினார்க் கெளியபெருமாளே.
