Song 274
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- பெஹாக்
- Thalam
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - அதீதம்)தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தனனத்தனதான
Lyrics
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்சொற்பா வெளிமுக்குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டேசுற்றா மதனப்பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பாடெற்றே யுலகிற்பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டாஎட்டா அருளைத்தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்தத்தாம் வினையைக்களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போதத்தாய் தணிகைத்தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்காவற்பா வைதனத்தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தாஅப்பா குமரப்பெருமாளே.
