Song 222
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
- Sthalam
- சுவாமி மலை
- Raagam
- காபி
- Thalam
- அங்கதாளம் (13 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தானனந் தனதனன தனதனா தத்த தந்ததனதான
Lyrics
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்துதடுமாறிஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்திமெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்துசுகமேவிமாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்றுபணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்றகுருநாதாவாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்குமணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்துபுடைசூழுங்கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்தபெருமாளே.
