Song 221
தெருவினில் நடவா மடவார்
- Sthalam
- சுவாமி மலை
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- சதுஸ்ர த்ருவம் (14)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
எடுப்பு /40/4/4தனதன தனனா தனனாதனந்த தத்தம்தனதான
Lyrics
தெருவினில் நடவா மடவார்திரண்டொ றுக்கும்வசையாலே
தினகர னெனவே லையிலேசிவந்து திக்கும்மதியாலே
பெருசிலை வளையா இளையாமதன்தொ டுக்குங்கணையாலே
புளகித முலையா ளலையாமனஞ்ச லித்தும்விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவேயுரம்பு குத்தும்வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமேயுகந்து நிற்கும்முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவேதெரிந்து ரைக்கும்புலவோனே
அரியரி பிரமா தியர்கால்விலங்க விழ்க்கும்பெருமாளே.
