Song 201
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
- Sthalam
- சுவாமி மலை
- Raagam
- ஜோன்புரி
- Thalam
- அங்கதாளம் (18)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1தகதிமிதக-3தனாதன தனாதன தனாதன தனாதனதனாதனன தானந்தனதானா
Lyrics
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனுமவார்கனலில் வாழ்வென்றுணராதே
அராநுக ரவாதையு றுதேரேக திநாடுமறிவாகியுள மால்கொண் டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததிமிராகரனை வாவென்றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்தியானமுறு பாதந்தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகனமுலாசமுட னேறுங்கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொளிவாகுமயில் வேலங்கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவசுதாஎயினர் மானன்புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடுசுவாமிமலை வாழும்பெருமாளே.
