Song 187
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதனதான
Lyrics
முத்துக்குச் சிட்டுக் குப்பிமுடித்துச்சுக் கைப்பிற் சுற்றியுமுற்பக்கத் திற்பொற் புற்றிடநுதல்மீதே
முக்யப்பச் சைப்பொட் டிட்டணிரத்நச்சுட் டிப்பொற் பட்டிவைமுச்சட்டைச் சித்ரக் கட்டழகெழிலாடத்
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்நச்சுக்கட் கற்புச் சொக்கியர்செப்புக்கொக் கக்கச் சுப்பெறுதனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பலலச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படியுழல்வேனோ
மெத்தத்துக் கத்தைத் தித்தியினிச்சித்தத் திற்பத் தத்தொடுமெச்சிச்சொர்க் கத்திற் சிற்பரமருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பரமுக்கட்சித் தர்க்குப் புத்திரவிச்சித்ரச் செச்சைக் கத்திகைபுனைவோனே
நித்யக்கற் பத்திற் சித்தர்களெட்டுத்திக் குக்குட் பட்டவர்நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள்அமரோரும்
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடுமுற்றத்துற் றர்ச்சிக் கப்பழநிக்குட்பட் டத்துக் குற்றுறைபெருமாளே.
