Song 186
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனன தனத்த தனன தனன தனத்ததனன தனன தனத்ததனதான
Lyrics
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்துமுதிய கயல்கள் கயத்தினிடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றிமுறைமை கெடவு மயக்கிவருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்குவலிய அடிமை புகுத்திவிடுமாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்மகிழ வுனது பதத்தையருள்வாயே
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்துசகடு மருத முதைத்ததகவோடே
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்ததநுவை யுடைய சமர்த்தன்மருகோனே
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்துஅமரர் சிறையை விடுத்துவருவோனே
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்குளழகு மயிலை நடத்துபெருமாளே.
