Song 183
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்தத் தனத்த தானனதனதன தந்தத் தனத்த தானனதனதன தந்தத் தனத்த தானனதனதான
Lyrics
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடுமையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுகமதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறைபரிமள கொங்கைக் குடத்தி லேமிகவலியவும் வந்தொத் திடத்தி லேவிழிவலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகனநிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயுமொயிலாலே
நிதமிய லுந்தர்க் குணத்தி லேபரவசமுட னன்புற் றிணக்கி லேயொருநிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகுமதிகேடாய்
அலையநி னைந்துற் பநத்தி லேயநுதினமிகு மென்சொப் பனத்தி லேவரஅறிவும ழிந்தற் பனத்தி லேநிதம்உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்த னாகியகசடனை யுன்சிற் கடைக்கணாடியமலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழஅருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமுமடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடுபரிமள மிஞ்சக் கடப்ப மாலையுமணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலையொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்பழநியி லன்புற் றிருக்கும் வானவர்பெருமாளே.
