Song 182
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
- Sthalam
- பழநி
- Raagam
- கேதாரகெளளை
- Thalam
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு 1/2 தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்ததனத்ததன தான தந்ததனதான
Lyrics
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்துவகைக்குமநு நூல்வி தங்கள்தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கிமயக்கமற வேத முங்கொள்பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்துமிகுத்தபொரு ளாக மங்கள்முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்துமிகுக்குமுனை யேவ ணங்கவரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்துமலர்ப்பதம தேப ணிந்தமுநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கிமருட்டிவரு சூரை வென்றமுனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்துசெகத்தைமுழு தாள வந்தபெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்ததிருப்பழநி வாழ வந்தபெருமாளே.
