Song 180
மந்தரம தெனவே சிறந்த
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்ததனதான
Lyrics
மந்தரம தெனவே சிறந்தகும்பமுலை தனிலே புனைந்தமஞ்சள்மண மதுவே துலங்கவகைபேசி
மன்றுகமழ் தெருவீ திவந்துநின்றவரை விழியால் வளைந்துவந்தவரை யருகே யணைந்துதொழில்கூறி
எந்தளவு மினிதா கநம்புதந்துபொருள் தனையே பிடுங்கியின்பமருள் விலைமாதர் தங்கள்மனைதேடி
எஞ்சிமன முழலாம லுன்றன்அன்புடைமை மிகவே வழங்கிஎன்றனையு மினிதாள இன்றுவரவேணும்
விந்தையெனு முமைமா துதந்தகந்தகுரு பரதே வவங்கமென்றவரை தனில்மேவு மெந்தைபுதல்வோனே
மிஞ்சுமழ கினிலே சிறந்தமங்கைகுற மடமா துகொங்கைமென்கிரியி லிதமா யணைந்தமுருகோனே
சிந்தைமகிழ் புலவோர்கள் வந்துவந்தனைசெய் சரணார விந்தசெந்தமிழ் லுனையே வணங்குகுருநாதர்
தென்றல்வரை முநிநாத ரன்றுகும்பிடந லருளே பொழிந்ததென்பழநி மலைமே லுகந்தபெருமாளே.
