Song 170
நாத விந்துக லாதீ நமோநம
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதனதான
Lyrics
நாத விந்துக லாதீ நமோநமவேத மந்த்ரசொ ரூபா நமோநமஞான பண்டித ஸாமீ நமோநமவெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநமபோக அந்தரி பாலா நமோநமநாக பந்தம யூரா நமோநமபரசூரர்
சேத தண்டவி நோதா நமோநமகீத கிண்கிணி பாதா நமோநமதீர சம்ப்ரம வீரா நமோநமகிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநமதூய அம்பல லீலா நமோநமதேவ குஞ்சரி பாகா நமோநமஅருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்ஓத லுங்குண ஆசார நீதியும்ஈர முங்குரு சீர்பாத சேவையுமறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளைசோழ மண்டல மீதே மநோகரராஜ கெம்பிர நாடாளு நாயகவயலுரா
ஆத ரம்பயி லர்ருரர் தோழமைசேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடியசேரர் கொங்குவை காவூர் நனாடதில்ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள்பெருமாளே.
